தலத்தின் சிறப்பு
அருணகிரிநாதரின் பூம்பரை வேலன் பாடல் இக்கோயிலின் மகத்துவத்தை அழகாக விவரிக்கிறது. இங்கு முன்புறமும் பின்புறமும் இயக்கப்படும் 'இருவடத் தேர் உலா' நடைபெறுகிறது.
திருவிழாக்கள் விவரங்கள்
பழனி தைப்பூச விழாவின் அடுத்த நாள் மக நட்சத்திர நாளன்று கொடியேற்றம் நடைபெறுகிறது. அதற்கு அடுத்துத் திருவீதி உலா வாகனப் புறப்பாடு நடைபெறுகிறது. ஒன்பதாம் நாள் கேட்டை நட்சத்திரத்தன்று தேர் உலாவும், பத்தாம் நாள் முருகக் கடவுளைப் பழனியம்பதிக்கு வழி அனுப்பும் விழாவும் நடைபெறுகின்றன.
வழிபாட்டுச் சடங்குகள் / முறைகள்
ஒவ்வோர் ஆண்டும் பூம்பாறை முருகனுக்கான தேர்த்திருவிழா தை மாதம் அல்லது மாசி மாதத்தில், கேட்டை நட்சத்திரத்தில் நடைபெறுகிறது.
ஊர்
பூம்பாறை
மாவட்டம்
திண்டுக்கல்