தலத்தின் சிறப்பு
வையாபுரி புலவர் பாடிய காமாட்சி அம்மன் பதிகம் இத்தலத்தின் சிறப்பாகும். மேலும் இக்கோயிலில் அடைத்த கதவிற்கு முன்பாகவே பூசை செய்யப்படுகிறது.கோயிலின் குச்சுவீடு கலசத்தின் (கருவறை கலசத்தின்) தரிசனம் சிறப்பான ஒன்றாகம். காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோயில் போன்றே இங்கும் பூசை மண்டபத்தின் முன்பு கௌளி சின்னம் (பல்லியின் சின்னம்) பொறிக்கப்பட்டுள்ளது. இங்கும் கௌளி குறி கேட்டல் முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது.
மூலவர் பெயர்
மூங்கிலணை காமாட்சி அம்மன்
தல மரம்
மூங்கில்
ஊர்
தேவதானப்பட்டி
மாவட்டம்
தேனி