கோயிலின் வேறு பெயர்
நீர்காத்த அய்யனார், கரையடி காத்த அய்யனார்
பிற தெய்வத்தின் பெயர்கள்
சாத்தனார், பூலார் உடையார்
அமைவிடம்
கோயில்பட்டியிலிருந்து அய்யனார் குளம் செல்லும் வழியில் உள்ள கண்மாய்க்கரையின் கீழே உள்ளது
ஊர்
அய்யனார் குளம்
மாவட்டம்
மதுரை
வெள்ளிக் கிழமைகளில் பூசைகள் நடைபெறும்.
ஆடி வெள்ளி பூசை மற்றும் மாசிப்பச்சைத் திருவிழா நடைபெறும்.
தேங்காய் பழம் படைத்தல், பலியிடல் - சேவல், கருங்கடா
இல்லை
இவ்விடத்தில் தனித்தனியே இரண்டு பீடங்களின் மேல் பிரம்மாண்டமான குதிரை சிற்பங்கள் காணப்படுகின்றன. முதல் சிற்பத்தில் அய்யனார் ஒரு குதிரையின் மீது மடியில் சிங்கத்துடன் அமர்ந்துள்ளார். குதிரையின் முன் கால்களை இரு பூதகணங்கள் தங்கள்தலையின்மேல் தாங்கியபடி நின்றுள்ளன. குதிரையின் காலின்கீழ் பூதகணங்கள், சிவன், விஷ்னணு, முனிவர்கள், இசை மற்றும் நடனக் கலைஞர்கள் ஆகியோர் உள்ளனர். இச்சிற்பத்திற்கு அருகில் உள்ள மற்றொரு குதிரைச் சிற்பத்தின் கீழ் பக்தர்கள் பல்வேறு பொருள்களை கொண்டு வந்து படைத்து வணங்குவது போல சிற்பம் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
முனைவர் இரத்தினகுமார்
கோயில்பட்டி சிவன் கோயில்
கோயில்பட்டியிலிருந்து அய்யனார் குளம் செல்லும் வழியில் உள்ள கண்மாய்க்கரையின் கீழ் உள்ளது
விக்கிரமங்கலம் - அய்யனார் குளம்
உசிலம்பட்டி
மதுரை